குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் முன்னணி இணையம் சார் நிறுவனங்களான கூகிள் மற்றும் முகப்புத்தகம் ஆகிய நிறுவனங்கள் அதிகளவு விளம்பர வருமானத்தை ஈட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிலிக்கன்வெலி ஜாம்பவான்களாக கருதப்படும் கூகிள் மற்றும் முகப்புத்தகம் நிறுவனங்களே இணைய விளம்பரங்களை அதிகளவில் பெற்றுக்கொண்டுள்ளமையானது அண்மைய காலாண்டு வருமான தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
டிஜிட்டல் விளம்பர சந்தையில் ஏனைய சிறிய நிறுவனங்களை விடவும் கூகிள் மற்றும் முகப்புத்தகம் ஆகிய நிறுவனங்கள் கூடுதலான லாபமீட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் மொத்த இணைய விளம்பர வருமானத்தில் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதியை இந்த இரண்டு நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது. ஈமார்கடர் என்ற ஆய்வு நிறுவனமொன்றினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Snap Inc (SNAP.N) மற்றும் Twitter Inc (TWTR.N)போன்ற நிறுவனங்கள் லாபத்தை அதிகரிக்க முடியாது சிரமப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூகிள் மற்றும் முகப்புத்தகம் ஆகிய நிறுவனங்கள் டிஜிட்டல் விளம்பர உலகில் கோலோச்சி இருப்பதற்கு பெரும் எண்ணிக்கையிலான பயனர்களை கொண்டிருப்பதே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.