Home இலங்கையாழ் சென்ற காவல்துறை மா அதிபர் காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் குறித்து உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்

யாழ் சென்ற காவல்துறை மா அதிபர் காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் குறித்து உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில் அண்மைக்காலமாக காவல்துறையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வரும் வேளையில் , அது தொடர்பிலான நிலைமைகளை நேரில் ஆராயும் நோக்குடன்   பூஜித ஜெயசுந்தர யாழ்ப்பணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட காவல்துறை மா அதிபர் ,  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலடியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்த கோப்பாய் காவல் நிலையத்தை சேர்ந்த இரு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் இருவரையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் பார்வையிட்டார்.

அதன் பின்னர் அண்மைக்காலமாக யாழ்.மாவட்டத்தில் காவல்துறையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து தாக்குதலாளிகளை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More