மகளுக்கு திருமணம் செய்து வைக்க 6 மாதம் பரோல் வழங்க கோரி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி. தாக்கல் செய்த மனு தொடர்பில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நளினி தனது மனுவில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தானும், தனது கணவர் முருகனும் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் லண்டனில் பாட்டியுடனவசித்து வரும் தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கதாக 6 மாதம் பரோலில் தன்னை விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் சிறை விதிகளின்படி, தண்டனை கைதிகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு மாதம் பரோலில் வெளியில் செல்லலாம் எனவும் எனினும் கடந்த 26 ஆண்டுகளாக தான் பரோலில் வெளியில் செல்லவே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் 6 மாதம் பரோலில் தன்னை விடுவிக்க வேண்டும் என தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., வேலூர் மத்திய சிறை கண்காணிப்பார் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில குறித்த மனுவுக்கு எதிர்வரும் ஓகஸ்டு 7ந் திகதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி, தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை இயக்குனர், வேலூர் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.