குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சர்வதேச ரீதியில் ஒடுக்கப்பட்டிருந்த இலங்கையின் நன்மதிப்பினை உயர்த்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் என்ன செய்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியை தொடர்ந்தும் நடத்த முடியாத காரணத்தினால் இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் எஞ்சியிருக்கவே தேர்தல் நடத்தியிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த தேர்தலில் மஹிந்த தோல்வியைத் தழுவியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு முதல் இரண்டு ஆண்டுகளில் என்ன செய்தார் என தாம் கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார். 2007ம் ஆண்டில் மஹிந்தவின் ஆட்சியை நீடித்துக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் தாம் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டதாகத் தெரிவித்துள்ளார்.