காவிரியில் கழிவு நீர் கலப்பதை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குழு எதிர்வரும் 15ம் திகதி முதல் ஆய்வுகளை ஆரம்பிக்கவுள்ளது.
பல்வேறு வகையான தொழிற்சாலைகளின் கழிவுகள் காவரிநதியில் கலக்கப்படுகின்றதனால் அங்குள்ள லட்சக்கணக்கான நீர்வாழ் உயிரினங்கள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதனைத் தொடர்ந்தே இவ்வாறு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேநேரம் இந்த கழிவு நீரால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகளுக்கு கர்நாடக அரசு இழப்பீடாக 2,400 கோடி ரூபா வழங்க வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதையடுத்து உச்ச நீதிமன்றம் அண்மையில், காவிரியில் கழிவு நீர் கலப்பதை கண்டறிந்து, தடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அத்துடன் இரு மாநிலங்களின் பங்களிப்புடன் கூட்டுக்குழுவை உருவாக்கி முறையாக ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.