Home இலங்கைமுல்லைத்தீவில் வறட்சியால் 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவில் வறட்சியால் 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியினால் 30,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவின்  வறட்சி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 10,000 குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளர்h.

மேலும்  இதற்கான விபரங்களை கொழும்பிற்கு அனுப்பி உள்ளதாகவும் கொழும்பில் இருந்து கிடைக்கின்ற உதவிகளை வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவு தயாராக இருப்பதாகவும்   அவர் தெரிவித்துள்ளார்.

குடிநீர் நெருக்கடி காணப்படுகின்ற கிராமங்களில் பிரதேச செயலகங்களின் ஒழுங்குப்படுத்தலில் குடிநீர் விநியோகம் இடம்பெற்று வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டாh்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More