குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் இடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தித் திட்ட இலக்குகள் தொடர்பில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்பட உள்ள இந்த அபிவிருத்தித் திட்டம் இலங்கையின் நீண்ட கால அபிவிருத்திக்கு உதவக் கூடிய வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த அபிவிருத்தி திட்டத்திற்கு 300 மில்லியன் டொலர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு வழங்க உள்ளது.
சிவில் சமூகம், அரசியல் தரப்புக்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை இணைத்துக் கொண்டு இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.