குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கணனி கட்டமைப்பிற்குள் ஊடுருவிய ரஸ்ய பிரஜைக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மக்சிம் செனக் (Maxim Senakh )என்ற ரஸ்ய பிரஜை மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லினக்ஸ் இயங்கு தளத்தைக் கொண்டமைந்த கணனிகளுக்குள் ஊடுருவி பாரியளவில் தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2015ம் ஆண்டு மக்சிம் செனக் பின்லாந்தில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். கணனி மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் 46 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.