Home உலகம்ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் 4 பேர் உயிரிழப்பு – 6 பேர் காயம்:-

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் 4 பேர் உயிரிழப்பு – 6 பேர் காயம்:-

by admin

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் நேட்டோ படை வீரர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவருகின்ற தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டு ராணுவத்தினருடன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை உறுதுணையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காபூல் நகரில், ஆப்கான் ராணுவ வீரர்களுடன் இணைந்து நேட்டோ படை வீரர்கள் ரோந்து அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த போது பெண் போன்று உடை அணிந்து வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More