குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த விவகாரத்தினால் எழுந்துள்ள நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதற்காக பிரிட்டன் தனது உள்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் என தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் தீர்மானிக்கும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதிகள் தடைப்பட்டால் பிரிட்டன் நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டிவரும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் உணவுப்பொருட்களை இறக்குமதியில் தங்கியிருப்பதாலேயே இந்த நிலை ஏற்படலாம் எனவும் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 வருடத்திற்கு முன்னர் நாடு தனக்கு தேவையான உணவில் பெரும்பகுதியை உற்பத்தி செய்தது.
சிறிதளவினை மாத்திரம் உற்பத்தி செய்கின்றது என்றும் தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த பத்து வருடங்களில் எங்களிற்கு தேவையான உணவில் 50 வீதத்தினை மாத்திரம் உற்பத்தி செய்வோம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தனது மக்களை பாதுகாப்பதும் அவர்களிற்கு உணவு வழங்குவதுமே அரசாங்கமொன்றின் முக்கிய இரு கடமைகளாகும் நாங்கள் ஏற்கனவே ஐரோப்பாவின் தன்னிறைவற்ற நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளோம் எனவும் விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.