குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ( Sergei Lavrov ) இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் ரஸ்ய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவார்கள் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் ( Rex Tillerson ) ஐ, ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சந்தித்துள்ளார். பிலிப்பைன்ஸின் தலைநகர் மனிலாவில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
ரஸ்யாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தம்முடனான சந்திப்பின் போது பொருளாதாரத் தடை குறித்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் வினவியதாக ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.