இந்தியர்களில் பெருமளவானோர் சுவிற்சலாந்து வங்கிகளில், கோடிக்கணக்கில் கறுப்பு பணத்தை சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்துள்ளனர். இது பற்றிய தகவல்களை இந்தியாவுடன் தானாகவே பகிர்ந்துகொள்ள வகை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் கையெழுத்து இட்டுள்ளன.
இதன்படி அங்கு பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றிய தகவல்களை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு அந்த நாடு வழங்க திட்டமிட்டு உள்ளது. இதில் முதற்கட்ட தகவல்கள் 2019-ம் ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றிய விவரங்களை பரிமாறுவது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசு விரிவான அறிவிப்பு ஒன்றை தனது அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிட்டு உள்ளது. அதில் ‘இந்தியாவுடன் கறுப்பு பண தகவல்கள் பரிமாற்றத்துக்கு, அந்த நாட்டின் தரவு, பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை சட்டங்கள் போதுமானதாக இருப்பதை சுவிட்சலாந்து அரசாங்கம் கண்டுகொண்டுள்ளது’ எனக் கூறப்பட்டு உள்ளது.
மேலும் காப்பீட்டுத்துறை மற்றும் பிற நிதிச்சேவைகள் உள்ளிட்ட இந்திய சந்தையை அதிகமாக அணுக சுவிட்சலாந்து விரும்புவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.