குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்தில் வசிக்கும் சிறுபான்மை இனங்களை சேர்ந்த குடும்பங்களின் வருமானம் வெள்ளையினத்தவர்களை விட வருடாந்தம் 8,900 ஸ்டேர்லிங் பவுண்டஸ்; குறைவாக உள்ளது என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது
ரெசெலுசன் பவுன்டேசன் என்ற அமைப்பு இது தொடாபான ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில் பிரித்தானியாவில்; வசிக்கும் பங்களாதேஸ் அல்லது பாக்கிஸ்தான் குடும்பம் வெள்ளையின நடுத்தர வர்க்க குடும்பத்தை விட குறைவான வருமானத்தையீட்டுவதும் கறுப்பினத்தவர்களின் வருமானமும் மிகவும் குறைவாக காணப்படுவதும் தெரிய வந்துள்ளது.
எனினும் கடந்த பத்து வருடகாலப்பகுதியில் பங்களாதேஸ் குடும்பமொன்றின் வருமானம் 38 வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள பல்வேறு இனத்தவர்களின் வாழ்க்கைத் தரத்தில் காணப்படும் வித்தியாசங்கள் புறக்கணி;க்கப்படுவதாக ரெசெலுசன் பவுன்டேசன் அமைப்பின் சிரேஸ்ட பொருளியல் ஆய்வாளர் அடம்கொர்லெட் தெரிவித்துள்ளார்
எனினும் வெள்ளையினத்தவர்களின் வருமானத்திற்கும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களின் வருமானத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக பாரிய வித்தியாசம் காணப்படுவதால் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் சில சமூகத்தவர்களின் வாழ்க்கை தரத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் காரணமாக மகிழ்ச்சியடையலாம் என தெரிவித்துள்ள அவர் பங்களாதேஸ் மற்றும் பாக்கிஸதான் குடும்பங்களின் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.