தீவிரவாத தாக்குதல்கள் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், அதிகாரிகள் மற்றும் சவுதியின் வடக்கு எல்லையில் உள்ள விமான நிலையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சவுதிக்கு வருவதற்கு முன்பாக அவர் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஐ.எஸ். முகாம்களில் பயிற்சி பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் குறித்த ஐ.எஸ். தீவிரவாதிக்கு, 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 20 ஆண்டு கால பயணத் தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.