குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டுமென கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைவதனைத் தவிர்க்க, ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சியின் தரப்புக்கள் கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆளும் தரப்பு உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக்கட்சியின் ஒரு சிலரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதனை விடவும், பதவியை விலகுவதே பொருத்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.