வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தற்காலிக அடிப்படையில் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டால், தற்காலிக அடிப்படையில் ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் ரவி கருணாநாயக்க பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான விவாதத்தை எப்போது நடத்துவது என்பது குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளது.