குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகினால் அந்தப் பதவி திலக் மாரப்பன அல்லது நவீன் திஸாநாயக்கவிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்கவின் வீடுக்கான வாடகையை, பேர்பச்சுவல் ட்ரசீரிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸ் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையில் காத்திருக்காது, கௌரவமான முறையில் பதவி விலகுமாறு ரவி கருணாநாயக்கவிற்கு ஆளும் தரப்பில் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வெளிவிவகார அமைச்சுப் பதவிக்கு சரத் அமுனுகம நியமிக்கப்பட உள்ளதாக முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது