குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமது பாரம்பரிய நிலங்களை விடுவிக்கக் கோரி, இரணைத்தீவு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளமையால் கொழும்பு – கோட்டை – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தங்களது பூர்வீக இடத்தில் மீள குடியேற வேண்டும் என வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்று 101 வது நாளினை அடைந்துள்ள நிலையில் அதனை முன்னிட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன் தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு, இரணைத்தீவு மக்கள் ஜனாதிபதி அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டதனால் கொழும்பு – கோட்டை – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது சொந்த நிலத்திற்குச் செல்வதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 101 நாளை எட்டியுள்ள நிலையில் தங்களை தங்களது மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மிடம் வருகை தந்த இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் சரி எவரும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே கொழும்பில் தங்களது போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாக இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனா்.
1 comment
இரணைத்தீவு தமிழ்மக்கள் சிங்கள தலையாளியை சந்திக்க சென்ற போது வீதிகள் மூடப்பட்டது என்று கவலைப்பட வேண்டாம், சிங்கள இன வெறியன் வெள்ளை வேட்டிகட்டிய ஆசாட பூபதியை நம்பியது உங்களது தவறு , தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்கள காடையர்களை தேசிய வீரர்கள் என்றும் அவர்களை காட்டி கொடு
க்கமாட்டேன் என்று நஞ்சை கக்கிய சிங்கள கொலைகார கூட்டத்தை நம்புவதை விடுத்து , கருவாட்டு தோட்ட காக்கை வன்னியன் சம்பந்தன், சுமந்திரன் போனற வர்களின்
ஆடம்பர மாளிககளை சுற்றிவளையுங்கள் காறி துப்புங்கள் செருப்படி கொடுங்கள் அப்போது தான் சர்வதேச செய்தியாகாமாறும் , அதற்க்குபின் காக்கைவன்னியன் கூட்டம் சர்வதேச அரங்கில் பீத்திறது எல்லாம் உண்மையாகி விடமுடியாது என்பதை நிரூபனமாகிவிடும் , இது எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கின்றது , செய் அல்லது தெரு பொறுக்கி காக்கைவன்னியனுக்கு செருப்படி கொடு . ராஜான்
=