தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா (Jacob Zuma) மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ளது.
வாக்கெடுப்பில் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமாக்கு ஆதரவாக 198 வாக்குகளும் , எதிராக 177 வாக்குகளும் கிடைத்துள்ளமையால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
தென்னாப்பிரிக்க ஜனாதிபதியாக கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஜேக்கப் பதவி வகித்து வருகின்ற நிலையில் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அவரை பதவி நீக்கம் செய்யும் வகையில் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர் மீது ஏற்கனவே 8 தடவை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு தோல்வியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.