குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லண்டன் நியுகாஸ்டில் பகுதியில் போதைப்பொருட்கள் மதுபானம் போன்றவற்றை வழங்கி யுவதிகளை பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தியதாக 18 பேர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளின் இறுதியில் அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
2011 முதல் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் 18 பேரும் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர்.
17 ஆண்கள் ஓரு பெண் அடங்கிய இந்த குழுவினர் பாலியல் வல்லுறவு, கடத்தல் , விபச்சாரத்தி;ல் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டது, போதைப்பொருளை ஊக்குவித்தது உட்பட சுமார் 100 குற்றங்களில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த குழுவை சேர்ந்தவர்கள் சுமார் 20 ற்கும் மேற்பட்ட யுவதிகளுடன் நட்பை ஏற்படுத்தி அவர்களை களியாட்ட நிகழ்வுகளிற்கு அழைத்து சென்று அவர்களிற்கு மதுபோதைப்பொருட்களை வழங்கி பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு;ள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் 14 முதல் 25 வயதிற்கு உட்பட்ட பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களிற்கு வன்முறை இழைக்கப்பட்ட சூழல் காரணமாக அவர்கள் முறைப்பாடு செய்வதற்கு தயங்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளனர்
சுமார் 20 ற்கும் மேற்பட்ட யுவதிகள் தங்களிற்கு என்ன நடந்தது என்பதை நீதிமன்ற விசாரணைகளின் போது விபரித்திருந்தனர்.
தங்களை பாதிப்பிற்குள்ளாக்கிய சிலர் தங்களின் சிறுவயது மற்றும் குடும்ப நண்பர்கள் என பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற விசாரணைகளி;ன் போது தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகள் பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியா ஈராக் ஈரான் மற்றும் துருக்கியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிற்கான தண்டனையை அடுத்த மாதம் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
காவல்துறையினர் மேற்கொண்ட சரணாலயம் நடவடிக்கை மூலம் இந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது