மத்திய வங்கியின் பிணை முறிகள் மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் தொடர்புள்ளதாக ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டு விசாரணை விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான சிரோமி விக்ரமசிங்கவிடமும் விசாரணை நடத்த வேண்டுமெனவும் முஜிபுர் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐ.தே.க.வின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பத்திக பத்திரணவால், பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
யாரோ ஒரு பெண் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே ரவி கருணாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டதென தெரிவித்த முஜிபுர் ரஹ்மான், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஏனையோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.