குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. வரிச் சலுகைத் திட்டம் பெற்றுக் கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் தற்போது ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எதிர்வரும் காலங்களில் விஜயங்களை செய்ய உள்ளதாகவும் பெரும்பாலும் அடுத்த ஆண்டில் இலங்கைக்கு வரிச் சலுகைத்திட்டம் மீளவும் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.