இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறதனால் மாண்டி பகுதியில் நேற்று முன்தினமிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மாண்டி-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் மற்றும் வாகனம் சுமார் 800 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விழுந்தன. இந்த திடீர் நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தொடர்மழையால் மீட்புப் பணிகள் செய்வதிலும் சிரமங்கள் காணப்பட்டன. இந்நிலையில், மாண்டி நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அங்குப் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர்.