குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் மக்கள் செல்வாக்கு அவரின் பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில் எதிர்பார்க்கப்பட்டதை விட வேகமாக சரியத் தொடங்கியுள்ளது கருத்துக்கணிப்புகள் மூலம் புலனாகியுள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பொன்றில் கலந்துகொண்டவர்களில் 36 வீதமானவர்கள் மாத்திரமே ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து தாங்கள் திருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் 64 வீதமானவர்கள் தாங்கள் திருப்தியடையவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த யூன் மாதம் பிரான்ஸ் ஜனாதிபதிக்கான ஆதரவு 64 வீதமாக காணப்பட்ட அதேவேளை யூலை மாதத்தில் அவரிற்கான ஆதரவு 54 வீதமாக குறைவடைந்துள்ளது.
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக்காலத்தின் முதல் நூறுநாட்களில் சந்தித்த வீழ்ச்சியை விட இது அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் முதல் மூன்று மாதங்களில் அவரது அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறைந்த வருமானம் பெறுபவர்களிற்கான வீடமைப்பு திட்டத்தை குறைப்பது குறித்த விவகாரத்திலும் சர்ச்சை உருவாகியுள்ளது.