குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெயின் தாக்குதல் காரணமாக ஏழு வயது பிரித்தானிய சிறுவன் ஒருவர் காணமல் போயுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற வேளை லஸ் ரம்பிலாஸ் பகுதியில் தாயுடன் காணப்பட்ட ஏழு வயது யூலியன் அலெஸ்ஸான்டிரோ கட்மன் என்ற ஏழு வயது சிறுவனையே காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிட்னியில் வாழும் சிறுவனின் உறவினர் ஓருவர் முகப்புத்தகத்தில் இந்த தகவலை வெளியிட்டு சிறுவனை கண்டுபிடித்து தருமாறு அவர் கோரியுள்ளார்.
சிறுவனின் தாயாரை கண்டுபிடித்துவிட்டோம் எனவும் அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் இடம்பெற்ற இரு தாக்குதல்களிலும் சிறிய எண்ணிக்கையிலான பிரித்தானிய பிரஜைகள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வாகனத்தினை பொதுமக்கள் மீது மோதிவிட்டு தப்பியோடிய நபரான மொரோக்கோவைச் சேர்ந்த மூசா உகாபீர் என்பவரை ஸ்பெயின் காவற்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்
குறித்த நபர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு அதிலிருந்து இறங்கி கால்நடையாவே தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டு. 100 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
லாஸ் ரம்ப்லாஸ் தாக்குதலையடுத்து கேம்ப்ரில்ஸ் நகரில் இரண்டாவது தாக்குதல மேற்கொள்ளவிருந்த பங்கரவாதிகள் ஐந்து பேரை காவல் துறை சுட்டுக்கொன்றமை குறிப்பிடத்தக்கது .