குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரலாற்றில் மிகவும் பலவீனமான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் காணப்படுகின்றது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் என்னும் வண்டிலை இரண்டு மாறுபட்ட காளைகள் வௌ;வேறு திசைகளில் இழுத்துச் செல்வதாகத் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் அமைச்சரவைக் கூட்டங்கள் நகைச் சுவை நிகழ்ச்சியாக மாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் கருத்துக்கள் எந்தவிதமான அர்த்தங்களையும் கொண்டதல்ல எனவும் அரசாங்கம் எந்தவொரு ஆக்கபூர்வமான கொள்கைகளையும் அமுல்படுத்த முயற்சிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அரச சொத்துக்களை விற்பனை செய்வதையே கொள்கையாக கொண்டு இந்த அரசாங்கம் இயங்கி வருகின்றது எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.