155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008 – 2009 காலப்பகுதியில் 5 தமிழ் இளைஞர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் டி.கே.பீ. தசநாயக்க குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார் .
Spread the love