குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிச்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மீது யார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்படாத போதிலும், அந்த நேரம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினராலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தை தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை பகுதியில் பதட்டமான ஒரு சூழ்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் குற்ற புலனாய்வு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அரசின் தகவல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை குறித்த மாணவர்களின் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்கபோவதில்லையென மாணவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகினறது.
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழப்பு.
Oct 21, 2016 @ 05:47
யாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான 23 வயதான நடராஜா கஜன் மற்றும் ஊடக்கற்கை மாணவனான 24 வயதான பவுண்ராஜ் சுலக்ஷன் ஆகிய இரு மாணவர்களுமே உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்திலேயே இரு மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.
யாழ்.பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் (வயது 23) மற்றும் ஊடககற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்ஷ்ன் (வயது 24) ஆகிய இரு மாணவர்களுமே உயிரிழந்துள்ளனர்.