Home இலங்கைஐ.தே.க தவிர வேறு எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கொள்ளத் தயார் – பசில் ராஜபக்ஸ

ஐ.தே.க தவிர வேறு எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கொள்ளத் தயார் – பசில் ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த வேறு எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கொள்ளத் தயார் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி போட்டியிடும் என குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர்ந்த வேறு எந்தவொரு கட்சியும் தம்முடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என   தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வாக்குறுதிகளை மீறி வருவதாகவும், இதன் ஓர் கட்டமாகவே தேர்தலை அரசாங்கம் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் எந்தக் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இந்த  அரசாங்கத்தை இலகுவில் தோற்கடிக்க முடியும் என  அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More