ஆதர் அட்டையில் இந்திய குடிமக்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களும் இருக்கும் என்ற வகையில் அனைத்து தகவல்களையும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு பெற்று இருக்கும் என நம்பப்படுகிறது..
ஆதாருக்காக வழங்கப்படும் தகவல் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று மத்திய அரசு உறுதி அளித்த போதும் சுமார் , 40 ஆயிரம் பேரின் ஆதார் தகவல்கள் திருடியதாக மென்பொருள் வல்லுனர் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை சிஐஏ திருடி உள்ளதாக விக்கிலீஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, கிராஸ் மேட்ச் ரெக்னோலஜிஸ் நிறுவனத்தின் எக்ஸ்பிரஸ் லேன் என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில், சில குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆதார் தகவல்களை ரகசியமாக சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய மத்திய அரசு இ இது விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் அல்ல எனவும் ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த தகவல்களில் உண்மை இல்லை எனவும் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது எனவும் மற்ற அமைப்புகளால் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது.