அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள ஹார்வே புயல் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன், விக்டோரியா, மற்றும் கார்பஸ் கிறிஸ்டி ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்றுத்தண்ணீர் நகரத்துக்குள் புகுந்துள்ளதாகவும் இதனால் வீடுகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டெக்சாஸ் மாகாணத்தின் 250 வீதிகள் முடப்பட்டுள்ளதுடன் விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவில் இந்த புயல் ; கடும் சேதத்தை ஏற்படுத்தியிருந்ததனைத் தொடர்ந்து டெக்சாஸ் மாகாணத்தினை பேரழிவு மாகாணம் என ஜனாதிபதி டிரம்ப் பிரகடனப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு2 – டெக்ஸாஸ் பேரழிவு மாகாணம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது:-
Aug 27, 2017 @ 03:02
குளோபல் தமிழ்சசெய்திகள்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை பேரழிவு மாகாணம் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து பிரகடனம் செய்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தை கடந்த சில தினங்களாக ‘ஹார்வே’ புயல் அச்சுறுத்தி வருக்னற நிலையில் கடந்த 12 வருடங்களில் இல்லாத வகையில் அமெரிக்காவின் பிரதான பகுதியை நேற்று தாக்கியுள்ளது. இந்த புயல் காரணமாக மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
பெரிய பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தமையினால பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் 2 லட்சத்து 11 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் டெக்ஸாஸ் மாகாணத்தை பேரழிவு மாகாணம் என ஜனாதிபதி டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார். மேலும் அடுத்த சில நாட்களில் டிரம்ப், டெக்ஸாஸ் மாகாணத்தில் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடவுள்ளதாகவும்; தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெக்ஸாஸில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய அபாயம்:-
அமெரிக்காவின் டெக்ஸாஸில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. டெக்ஸாஸின் ஆளுனர் கிரேக் அபோட் இந்த வெள்ள அனர்த்தம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடுமையான புயல் காற்று காரணமாக மழை வெள்ளம் ஏற்படக் அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே டெக்ஸாஸ் மாநிலத்தில் 50 சென்றிமீற்றர் அளவில் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புயல் காற்று மற்றும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதில் சிரமங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.