பாலியல் வழக்கில் தேரா சச்சா அமைப்பின் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆசிரமத்தில் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி, பிஸ்டல்கள், ஆயிரக்கணக்கான இரும்பு லத்திகள், பெட்ரோல் குண்டுகள், ஹாக்கி ஸ்டிக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என ராம் ரஹீம் சிங்கை நீதிமன்றம் அவரின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறையில் 31 பேர் கொல்லப்பட்டதுடன் 250க்கும் மேற்பட்டேமார் காயமடைந்தனர்
இந்த வன்முறை பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மிக வன்மையாக கண்டித்துள்ளதுடன் ராம் ரஹீம்சிங்கின் சொத்துகளை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் ராம் ரஹீம் சிங்கின் ஆசிரமங்கள் சோதனையிடப்பட்டது. இதன்போது ஆசிரமத்தில் பிஸ்டல்கள், ரைபிள்கள், ஏகே 47 ரக துப்பாக்கி, பல்லாயிரக்கணக்கான இரும்பு லத்திகள், கோடாலிகள், ஹாக்கி ஸ்டிக்குகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சிர்சா ஆசிரமத்துக்குள் பதுங்கி இருந்த 4,000 ஆதரவாளர்களும் படிப்படியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ராம் ரஹீம் சிங்குக்கான தண்டனை நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதன்போது அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடாமல் தடுக்க துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.