குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு வழங்கப்படும் வாழ்வாதார நிதியுதவியை நிறுத்துவது அவர்களை வெளியேற்றுவது ஆகிய நடவடிக்கைகளிற்கு எதிராக போராடப்போவதாக அகதிகளின் உரிமைகள் குறித்து குரல்கொடுக்கும் அமைப்புகளும் கிறிஸ்தவ தேவாலயங்களும் கருத்து தெரிவித்துள்ளன
அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்றுமுதல் புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளிற்கு வழங்கப்படும் நிதி உதவியை நிறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அகதிகளின் உரிமைகள் குறித்து குரல்கொடுக்கும் அமைப்புகளும் கிறிஸ்தவ தேவாலயங்களும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளன.
தாங்கள் அந்த மக்கள் பட்டினி கிடைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர்கள் இருப்பதற்கு இடமில்லாமல் அவதியுறும் நிலையை அனுமதிக்கப்போவதில்லை எனவும் புகலிடக்கோரிக்கையாளர்கள் வள நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். அவர்கள் மனஸ் மற்றும் நவ்று தீவு முகாம்களிற்கு திருப்பி அனுப்பப்படும் நிலையை அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அகதிகள் செயற்பாட்டு கூட்டணி என்ற அமைப்பின் உறுப்பினர் ஓருவர் அகதிகளிற்கு தங்குமிடம், வருமானம் மற்றும் சட்டரீதியான உதவிகளை வழங்க தனது அமைப்பு தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.