Home இலங்கைஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படவில்லை – சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படவில்லை – சந்திரிக்கா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பங்களிப்பு வழங்கியமை சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படுவதாக அர்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை மீட்டெடுக்கும் நோக்கிலேயே நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். மாவனல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சுதந்திரக் கட்சிக்கு பாதக நிலைமைகள் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More