Home உலகம்அமெரிக்க ஹார்வே புயல் – ஹூஸ்டன் நகரிலுள்ள இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன:-

அமெரிக்க ஹார்வே புயல் – ஹூஸ்டன் நகரிலுள்ள இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன:-

by admin

அமெரிக்காவில் வீசிய ஹார்வே புயல் காரணமாக ரெக்சாஸ் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஹூஸ்டன் நகரிலுள்ள இரண்டு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக ஹூஸ்டன் நகரத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நிரம்பி வழிந்த தண்ணீர் நகரத்துக்குள் புகுந்ததால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன. இதையடுத்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றநிலையில் ஹூஸ்டனில் உள்ள விமான நிலையங்கள் மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ள நிலைமை சீராகும் வரை இந்த விமான நிலையங்கள் மூடப்பட்டு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More