குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தடுப்பு முகாம்களில் இருந்து அவுஸ்திரேலியாவிற்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்ட அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கான நிதி உதவி மற்றும் தங்குமிட உதவி ஆகியவற்றை நிறுத்தும் திட்டத்தை குடிவரவு துறை அமைச்சர் பீட்டன் டட்டன் நியாயப்படுத்தியுள்ளார்
வானொலி பேட்டியென்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தடுப்பு முகாமிலிருந்து தப்புவதற்காக மருத்துவ பரிசோதனைகளை புகலிடக்கோரிக்கையாளர்கள் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனைகள் உட்பட பல காரணங்களிற்காக முகாம்களில் இருந்து அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்துள்ள 60 பேரிற்கு அவர்களிற்கான உதவிகள் இடைநிறுத்தப்படுகின்றன என்ற அறிவுறுத்தலை வழங்கியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு மருத்துவசிகிச்சை வழங்கப்பட்டதும் அவர்கள் தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கின்றனர் எனவும் இதற்காக சட்ட நடவடிக்கைகளை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்