குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவில் மிகவும் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவரை கனேடிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கனேடிய காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். எனினும் விசாரணைகளின் பின்னர் இந்த நபர் அமெரிக்காவில் மிகவும் தேடப்பட்டு வரும் ஒர் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.
மொன்ரியல் சைக்கிள் காவல்துறையினர் கற்ரே கோபோன் சிசான்தா ( Katay-Khaophone Sychantha) என்ற குறித்த நபரை கைது செய்ததுள்ளனர். இந்த நபர் பற்றிய விபரங்களை வழங்குவோருக்கு 25000 டொலர் சன்மானம் வழங்குவதாக அமெரிக்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. அவர் போலியான அமெரிக்க அடையாள அட்டை ஒன்றை காண்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.