குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டதனால் துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்தும் என இந்தியா அச்சம் வெளியிட்டிருந்தது.
எனினும் இராணுவ நோக்கங்களுக்காக இந்த துறைமுகத்தை சீனாவிடம் வழங்கவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ள பிரதமர் எந்தவொரு இராணுவத்தினதும் முகாமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் பயன்படுத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.