Home உலகம்பாகிஸ்தானில் கனமழை காரணமாக குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கனமழை காரணமாக குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு

by admin

பாகிஸ்தானில் சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக  ஏற்பட்ட வெள்ளத்தினால்  7குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   உயிரிழந்தவர்களில்  பலர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் கடந்த புதன் கிழமை முதல் கனமழை பெய்து வருகின்றமையினால்    நகரம் முழுவதும் வெள்ளமயமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள்   மோட்டார் மூலம் தெருக்களில் உள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More