Home இந்தியாகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் மீனவர் குப்பங்களுக்கிடையில் மோதல் 2 பேர் அடித்துக்கொலை:-

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் மீனவர் குப்பங்களுக்கிடையில் மோதல் 2 பேர் அடித்துக்கொலை:-

by admin

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே இரண்டு மீனவர் குப்பங்களுக்கிடையில் ஏற்பட்ட குழு மோதலில் இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 10 பேர் காயமடைந்தனர். ஆத்துடன் படகுகள், இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் இடம்பெற்ற படப்பின் போது வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பது தொடர்பாக இவர்களுக்குள் ஏற்கனவே ஏற்பட்ட முரண்பாடு காணப்பட்ட நிலையில் கடல் சீற்றம், கடல் அரிப்பு போன்ற நேரங்களில் படகுகளைக் கரைகளில் இழுப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள டிராக்டர்களைப் பயன்படுத்துவது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு மோதலாக வெடித்துள்ளதாகவும் இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் குறித்து வாசாரணைகளை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் காயமடைந்தவர்களை அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்ததுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்தபகுதியில் பதற்றம் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More