Home உலகம்நைஜீரியா போர்னோ மாகாணத்தில் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் படுகொலை:-

நைஜீரியா போர்னோ மாகாணத்தில் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் படுகொலை:-

by admin


நைஜீரியா போர்னோ மாகாணத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நைஜீரியாவில் ஒரு மதத்தின் அடிப்படையிலான அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் போகோஹரம் தீவிரவாத அமைப்பினர் 2002-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போர்னோ மாகாணத்தின் தலைநகரான மைதுகுரியில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள பாங்கி என்ற நகரத்துக்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த தீவிரவாதிகள் மேற்கொண்ட தாககுதலில் 18 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More