Home இந்தியாஇந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான முதல் தமிழ் பெண் நிர்மலா:-

இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான முதல் தமிழ் பெண் நிர்மலா:-

by admin


இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமனின் தாய்வழி தாத்தா தமிழகத்தின் முசிறியை சேர்ந்தவர். திருச்சியில் 18- 8 -1959ல் பிறந்த நிர்மலாவின் தந்தை சீதாராமன் திருச்சி ரயில்வேயில் பணியாற்றினார். சேலம், சென்னை ஆகிய இடங்களுக்கு நிர்மலாவின் தந்தை சீதாராமன் இடம் மாறியதால் அவரது குடும்பமும் இடம்பெயர்ந்தது.

திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் கல்விபயின்ற நிர்மலா சீதாராமன். பின்னர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பை தொடர்ந்தார்.

ஆந்திராவை சேர்ந்த வைத்தியகாலநிதி பிரகலாத் பிரபாகர் என்பவரை மணந்து ஹைதராபாத்துக்கு சென்றார். அதன்பின் டெல்லியில் குடியேறிய நிர்மலா சீதாராமன் குடும்பத்திற்கு ஒரு மகள் இருக்கிறார்.

பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நிர்மலா சீதாராமன். 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வர்த்தகத் துறை இணை அமைச்சரானார். 2016-ல் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராகியுள்ளார் நிர்மலா சீதாராமன். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகியுள்ள முதல் தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன். இந்திரா காந்தி பிரதமர் பதவியுடன் பாதுகாப்பு துறையையும் வைத்திருந்தார். ஆனால் முதல் முறையாக பாதுகாப்புத் துறை ஏற்றுள்ள பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More