குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலி வடக்கு பாதுகாப்பு வலயத்தில் இருந்த ஊறணி பாடசாலை நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பாடசாலை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ராணுவத்தினர் யாழ். மாவட்டச் மேலதிக அரச அதிபர் எஸ்.முரளிதரனிடம் காணியை கையளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 27 வருடங்களாக ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து வந்த ஊறணியின் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்கள் மீளக் குடியேறிவருகின்றனர்.
இவ்வாறு மீள்குடியேறும் மக்கள் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஊறணி கனிஸ்ட வித்தியாலயத்தை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்து வந்தநிலையிலேயே குறித்த பாடசாலை அமைந்துள்ள 3.9 பரப்புக் காணியை ராணுவத்தினர் விடுவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊறணி கனிஸ்ட வித்தியாலய காணி ராணுவத்தினரால் விடுவிப்பு
Sep 4, 2017 @ 07:52
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலி வடக்கு பாதுகாப்பு வலயத்தில் இருந்த ஊறணி பாடசாலைக் காணி இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 வருடங்களாக ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து வந்த ஊறணியின் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்கள் மீளக் குடியேறிவருகின்றனர்.
இவ்வாறு மீள்குடியேறும் மக்கள் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஊறணி கனிஸ்ட வித்தியாலயத்தை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையிலேயே குறித்த பாடசாலை அமைந்துள்ள 3.9 பரப்புக் காணியை ராணுவத்தினர் இன்றையதினம் யாழ். மாவட்டச் மேலதிக அரச அதிபர் எஸ்.முரளிதரனிடம கையளித்துள்ளனர்.