குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காம்பிய போர்ட்லன்ட் கிளசிக் போட்டித் தொடரில் ஸ்ரேசி லூயிஸ் ( Stacy Lewis ) வெற்றியீட்டியுள்ளார். மிக நீண்ட இடைவெளியின் பின்னர் அவர் கொல்ப் சம்பியன்சிப் போட்டித் தொடர் ஒன்றில் வெற்றியீட்டியுள்ளார். இந்தப் போட்டியில் வெற்றியீட்டியமைக்காக அவருக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்தப் பணப் பரிசு தொகையை ஹூஸ்டன் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கப் போவதாக லூயிஸ் தெரிவித்துள்ளார். லூயிஸி ன் சொந்த ஊர் ஹூஸ்டன் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க தாம் இந்தப் போட்டியில் வெற்றியீட்ட வேண்டுமென விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.