குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியா யுத்தத்தை விரும்பி செயற்பட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. வடகொரியாவுடன் தொடர்புகளைப் பேணி வரும் நாடுகள் ஆபத்தான அணு நோக்கங்களுக்கு உதவும் வகையில் செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹேலி ( Nikki Haley )தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் வடகொரியாவுடன் எந்தவொரு நாடும் தொடர்புகளை பேணுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் முக்கிய வர்த்தக பங்குதாரரான சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் சமாதான முறையில் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.