Home இந்தியாஇந்திய இளம் கிரிக்கெட் அணி வீரர் இலங்கையில் நீரில் மூழ்கி மரணம்

இந்திய இளம் கிரிக்கெட் அணி வீரர் இலங்கையில் நீரில் மூழ்கி மரணம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்திய 17 வயதுக்கு உட்பட்ட கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் , இலங்கையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.   இந்திய வீரர்கள் தங்கியிருந்த பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீந்திக்கொண்டிருந்த வேளை, குறித்த வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவத்தில்  12 வயதான இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   குறித்த இந்திய இளம் வீரரின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இளம் அணியில் 19 வீரர்கள் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More