Home இலங்கைகொரிய நாட்டின் இளைஞர் குழு கல்வி இராஜாங்க அமைச்சரை சந்தித்துள்ளனர்

கொரிய நாட்டின் இளைஞர் குழு கல்வி இராஜாங்க அமைச்சரை சந்தித்துள்ளனர்

by admin


கொரிய நாட்டின் இளைஞர் குழு ஒன்று இன்று   கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனை சந்தித்துள்ளனர். அவரது அமைச்சில்   சந்தித்த அவர்கள்  இலங்கையின் இளைஞர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு கொரிய நாட்டில் கல்வி , வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் இளைஞர்களின் தொழில் விருத்தியான்மை தொடர்பிலும் கலந்துரையாடினர்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய நாட்டின் சர்வதேச இளைஞர் சம்மேளனத்தின் இலங்கைக்கான தேசிய அமைப்பாளர் ஹேய்ன் ஹோங் ஜொய் தலைமையிலான குழுவின கலந்து கொண்டனர்.

அதேவேளை மேற்படி குழுவினர் எதிர்வரும் 14ம் திகதி    கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினை  அவரது அமைச்சல்  சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.

இந்த குழுவினர் எதிர்வரும் 16ம் திகதி      ஹட்டன் நகரில் நடைபெறவுள்ள மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மகாநாட்டிலும்     கலந்து கொள்ளவுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More