சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் தமிழக முதலமைச்சர்; ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கட்டாயப்பத்தி வெளியேற்றியுள்ளனர். இந்த போராட்டத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் உட்பட பெருமளவானோhர் பங்குபற்றியுள்ளனர்.
நீட் தேர்வை கடுமையாக ஜெயலலிதா எதிர்த்தவர் என்பதனால்தான் அவரின் நினைவிடத்தில் போராட்டத்தைத் ஆரம்பித்துள்ளதாகவும் எனினும் காவல்துறையினர் தம்மை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர் எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் ; நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு கிடைக்கும் வரையில் தங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளைப் பெண் காவல்துறையினர் கட்டாயப்படுத்தி வெளியேற்ற முயற்சித்த போது மாணவி ஒருவர் மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில் ; மெரினாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.