குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டிய கடப்பாடு ஐரோப்பிய ஓன்றியத்திற்குள்ளதாக பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் ஓன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் உடன்பாடு ஏற்படும் என தான் மிகவும் உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவி;த்துள்ளார்.
வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய சட்டரீதியான கடப்பாடு ஐரோப்பிய ஓன்றியத்திற்குள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வர்த்தகபேச்சுக்கள் ஓக்டோபர் மாதத்தில் ஆரம்பமாவதற்கான வாய்ப்புகள் இல்லையென ஐரோப்பிய ஓன்றிய அதிகாரிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையிலேயே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்தினால் ஐரோப்பிய ஓன்றியத்துடன் மேலும் முரண்பாடு ஏற்படலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளளனர்.