குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோதமான முறையல் வடகொரியா இலங்கைக்கு சில பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிலக்கரி, உருக்கு உள்ளிட்ட சில பொருட்களை வடகொரியா ஏற்றுமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தடைகளை மீறி சீனா, இலங்கை, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளுக்கு இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆயுத ஏற்றுமதி தடை, நிதி கொடுக்கல் வாங்கல் தடை மற்றும் பொருட்கள் ஏற்றுமதி தடை என்பனவற்றை வடகொரியா மீறி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.